ஜார்ஜ்டவுன், ஜூலை.22-
விவகாரத்து தொடர்புடைய வழக்குகள் ஒரே நாளில் தீர்க்கக்கூடிய சாதனையையும், அடைவு நிலையையும் பினாங்கு, ஷரியா நீதித்துறை பதிவு செய்து வருகிறது.
கணவன், மனைவி இருவரும் விவகாரத்து கோரும் போது, அவர்களின் வழக்கு மீதான சர்ச்சை நீட்டிக்கப்படாமல் ஒரே நாளில் தீர்க்கப்பட்டு வருவதாக பினாங்கு மாநில ஷரியா தலைமை நீதிபதி டத்தோ ஸாயிம் முகமட் யுடின் தெரிவித்தார்.
விவகாரத்து உத்தரவு உட்பட எந்தவொரு சர்ச்சைக்கும் இடமில்லாமல் கணவன், மனைவி இணக்கத்துடன் விவகாரத்துக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது.
மக்கள் தொடர்புடைய குறிப்பாக குடும்ப நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து சர்ச்சை செய்வதற்கு வழி வகுக்காமல், மனம் கலந்து பேசி, அவர்களுக்குள் தீர்க்கமான ஒரு முடிவை எடுப்பதில் பினாங்கு ஷரியா நீதிமன்றம் முக்கியப் பங்காற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார்.








