கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பெர்சத்து கட்சியைச் சேர்ந்த கோல கங்சார் எம்.பி. டத்தோ இஸ்கன்டார் டிசுல்கர்னாயின் அப்துல் காலிட் கட்சியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின் அறிவித்துள்ளார்.
ஓர் எதிர்க்கட்சி எம்.பி. என்பதையும் மறந்து, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தார்மீக ஆதரவை வழங்கி கட்சியின் அமைப்பு சட்டத்தை மீறியதற்காக கோலகங்சார் எம்.பி. இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளருமான ஹம்சா சைனுடின் குறிப்பிட்டுள்ளார்.








