Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பாதுகாப்பான தொகுதியை மஇகா இழந்தது
தற்போதைய செய்திகள்

பாதுகாப்பான தொகுதியை மஇகா இழந்தது

Share:

வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று மஇகா எடுத்த முடிவினால் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பான தொகுதியாக இருந்து வரும் நெகிரி செம்பிலான் ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வாய்ப்பை மஇகா இழந்தது.

கடந்த 28 ஆண்டு காலமாக ஒரு முறைக்கூட தோற்கடிக்கப்படாமல் மஇகாவிற்கு பாதுகாப்பான தொகுதியாக ஜெராம் பாடாங் தொகுதி விளங்கியது. எனினும் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று மஇகா எடுத்த முடிவினால் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் நெகிரி செம்பிலான் மாநில மஇகா தலைவருமான டத்தோ எல். மாணிக்கத்திற்கு பேரிடியாக மாறியுள்ளது. அத்தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினராக மாணிக்கம் இருந்து வந்துள்ளார்.

இது தொடர்பாக மலேசியாகேஸட் செய்தியார்கள் டத்தோ மாணிக்கத்தை அணுகி கேட்ட போது, கருத்துரைக்க மறுத்து விட்டார். மஇகாவின் தேசியத் தலைவரிடமே இது குறித்து கேளுங்கள் என்று ஒரே வரியில் பதில் அளித்தார்.

Related News