மலேசியாவின் நகரமயமாக்கல் விகிதமானது, தற்போது 78.5 விழுக்காடாக உயர்ந்துள்ள நிலையில், வரும் 2040-ஆம் ஆண்டிற்குள் அது 85 விழுக்காட்டைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 1970-ஆம் ஆண்டில் நாட்டின் நகரமயமாக்கல் விகிதம் வெறும் 28 விழுக்காடாக மட்டுமே இருந்ததாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
மேலும், 2040-ஆம் ஆண்டிற்க்குள் மலேசியர்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறந்த நகரத் திட்டமிடல் என்பது பொதுமக்கள் அடிப்படை வசதிகளை எளிதில் அணுகும் வாய்ப்பு, அன்றாடப் பயணங்களின் வசதி, பாதுகாப்பான பொது இடங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்பட வேண்டும் என்று இன்று புதன்கிழமை நடைபெற்ற உலக நகரத் திட்டமிடல் தினம் 2026 நிகழ்ச்சியுடன், ஐந்தாவது தேசிய இயற்பியல் திட்டம் மற்றும் மூன்றாவது தேசிய நகரமயமாக்கல் கொள்கை ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் ஙா கோர் மிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








