கடந்த மாதம், ஜோகூர் மாநிலம், மூவார் நகராட்சியைச் சேர்ந்த அமலாக்க அதிகாரிகள் தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது இடையூறு ஏற்படுத்திய தாயும் மகளும் தலா 500 ரிங்கிட் அபராதம் செலுத்த மூவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தோனேசியப் பிரஜையான 52 வயதான அய்னுன் ஜொகின், அவரது மகள் 24 வயதான லூ சொக் யான் ஆகிய இருவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதையடுத்து மாஜிஸ்திரேட் கார்தினி கஸ்ரான் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
மேலும், அபராதத்தைச் செலுத்தத் தவறினால் இருவரும் தலா 30 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, இருவரும் அபராதத் தொகையைச் செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








