Nov 4, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 70% அவசரமற்ற நோயாளிகள் – சட்டமன்றத்தில் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் 70% அவசரமற்ற நோயாளிகள் – சட்டமன்றத்தில் தகவல்

பினாங்கு மருத்துவமனையின் அவசரகால மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவுக்கு வரும் நோயாளிகளில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் அவசரமற்ற நிலையில் சிகிச்சை பெற வருபவர்கள் என்று மாநில சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மருத்துவமனையில் நோயாளிகள் நெரிசல் அதிகரிப்பதாக மாநில சுகாதாரக் குழுத் தலைவர் டேனியல் கூய் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரிவில் தினமும் சராசரியாக 300 நோயாளிகள் சிகிச்சைக்காக வருவதாகவும், ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான தரவுகளின்படி, அவர்களில் 32.99 விழுக்காட்டினர் அவசரமற்ற நோயாளிகளாகவும், 40.6 விழுக்காட்டினர் சிறிய பாதிப்புகளைக் கொண்ட கிரின் ஸோன் நோயாளிகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, மொத்தம் 73.56 விழுக்காட்டினர் அவசர சிகிச்சைக்கு அவசியமற்றவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், உடனடி சிகிச்சை தேவைப்படும் ரேட் ஸோன் நோயாளிகள் 7.14 விழுக்காட்டினராகவும், ஓரளவு அவசர சிகிச்சை தேவைப்படும் யல்லோவ் ஸோன் நோயாளிகள் 19.81 விழுக்காட்டினராகவும் உள்ளனர் என்றும் டேனியல் கூய் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →