Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பேராபத்தில் சுங்கை ஜோகூர்! மாசு காரணமாக 200,000 வீடுகளுக்கு தண்ணீர் துண்டிப்பு!
தற்போதைய செய்திகள்

பேராபத்தில் சுங்கை ஜோகூர்! மாசு காரணமாக 200,000 வீடுகளுக்கு தண்ணீர் துண்டிப்பு!

Share:

ஜோகூர் பாரு, நவம்பர்.01-

ஜோகூர் ஆற்றில் ஏற்பட்ட அபாயகரமான மாசு காரணமாக, மாநிலம் முழுவதும் சுமார் 200 ஆயிரம் பயனாளிகளுக்கு குடிநீர் விநியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டது! ஆற்றில் வேதியியல் கழிவுகள் அல்லது பிற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலந்ததால், சுங்கை ஜோகூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக Ranhill SAJ நிறுவனம் தெரிவித்து.

இந்த மிகப் பெரிய நீர் நெருக்கடியால், ஜோகூர் பாருவும் அதைச் சுற்றியுள்ள முக்கியப் பகுதிகளிலும் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி, அவசரகால நீர் விநியோகத்தை நாட வேண்டியதாயிற்று. மாசிற்கு காரணமானவர்களைக் கண்டறியவும், ஆற்று நீரின் தரத்தை மீட்டெடுக்கவும், எதிர்காலத்தில் இத்தகைய நெருக்கடியைத் தடுக்கவும் Ranhill SAJ அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related News