Dec 3, 2025
Thisaigal NewsYouTube
972 காகங்கள் சுட்டுக் கொல்லப்பட்டன
தற்போதைய செய்திகள்

972 காகங்கள் சுட்டுக் கொல்லப்பட்டன

Share:

கோல லங்காட், அக்டோபர்.05-

கோல லங்காட் மாநகர் மன்றம் இரண்டாவது கட்டமாக நடத்திய அதிரடி 'காக வேட்டை' - Operasi Gagak Kuala Langat Siri 2/2025 மூலம் 972 காகங்களைச் சுட்டுக் கொன்றது. இந்தக் காகங்கள் பொது இடங்களில் சத்தத்தையும் அசுத்தத்தையும் ஏற்படுத்துவதாக மக்கள் புகாரளித்ததைத் தொடர்ந்து, அடையாளம் காணப்பட்ட இடங்களில் அதிகாலையில் தொடங்கி இரவு வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 17 பதிவுச் செய்யப்பட்ட துப்பாக்கி சுடும் வீரர்களும் காவற்படை அதிகாரிகளும் இணைந்து பணியாற்றினர். இதனை கோல லங்காட் மாநகர் மன்றத்தின் துணைச் செயலாளர் ஸுல்கிஃப்லி முகமட் அரிஃபும் பண்டார் சௌஜானா புத்ரா காவற்படையின் தலைவர் இன்ஸ்பெக்டர் தனேஸ்வரன் ஶ்ரீதரனும் அதிகாரப்படியாகத் தொடக்கி வைத்தனர்.

Related News