கோலாலம்பூர், செப்டம்பர்,10-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் தேடப்பட்டு வரும் மலேசிய தொழில் அதிபர் ஜோ லோ மற்றும் அவரின் குடும்பத்தினர் தொடர்புடைய 39 மில்லியன் ரிங்கிட் பணத்தை மலேசியா திரும்பப் பெற்றுள்ளது.
8.7 மில்லியன் அமெரிக்க டாலரான அந்தப் பணம், சிங்கப்பூர் வர்த்தக விவகார இலாகாவின் உதவியுடன் 1 எம்டிபி சொத்து மீட்பு அறக்கட்டளை கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அறிவித்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு அமெக்க நிதித்துறைக்கும், ஜோ லோவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உலகலாவிய சிவில் பறிமுதல் தீர்வு நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தப் பணம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் கீழ் இதுவரை 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சொத்துகள் அந்த அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.








