Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஆறு சீனநாட்டுப்பிரஜைகள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆறு சீனநாட்டுப்பிரஜைகள் கைது

டிச.3-

ஓன்லைன் சூதாட்ட மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் சீன நாட்டைச் சேர்ந்த ஆறு பேரை பேரா போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசாருக்கு கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை, ஈப்போவில் உள்ள சன்வே சிட்டியில் ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அந்த அறுவரும் கைது செய்யப்பட்டதாக பேரா மாநில இடைக்கால போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Zulkafli Sariaat தெரிவித்தார்.

29 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதுடைய ஆறு சீனநாட்டுப்பிரஜைகளும் கைப்பேசி அழைப்புகளை நிர்வகித்தல், வங்கி கணக்கை கண்காணித்தல், வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குதல் என்ற பெயரில் இந்த மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக Zulkafli Sariaat விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →