கோலாலம்பூர், அக்டோபர்.16-
மலேசியா தனது முதல் ராக்கெட் ஏவுதளத்தை உருவாக்கும் முயற்சியில் ஒரு படி முன்னேறியுள்ளது என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நவீன அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து பகாங் மாநில அரசால் தயாரிக்கப்பட்ட முதல் முழுமையான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை இந்த ஆண்டின் தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் டத்தோ முகமட் யுசோஃப் அப்டால் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், சபா அரசாங்கத்திடமிருந்து இடைக்கால சாத்தியக்கூறு அறிக்கையையும் தனது அமைச்சகம் பெற்றதாக அவர் கூறினார்.
சபாவுக்கான முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், இத்திட்டத்தின் சாத்தியக்கூறை மதிப்பாய்வு செய்யும் பணிகள் தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








