Oct 17, 2026
Thisaigal NewsYouTube

லோரி ஓட்டுநரை மீட்க கடும் போராட்டம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லோரி ஓட்டுநரை மீட்க கடும் போராட்டம்

தாப்பா, நவ.13-


வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 315.3 ஆவது கிலோமீட்டரில் தாப்பாவிற்கு அருகில் டிரெய்லர் லோரியில் மோதிய லோரி ஓட்டுநர் ஒருவர், இடிபாடுகளுக்கு இடையில் கால்கள் சிக்கி, வெளியேற முடியாமல் பரிதவித்த நிலையில், அவரை தீயணைப்பு, மீட்புப்பபடையினர் கடுமையாக போராடி மீட்டனர்.

இன்று காலை 8.23 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்து தொடர்பில் அவசர அழைப்பைப்பெற்ற தீயணைப்பு,மீட்புப்படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தி, 30 வயது மதிக்கத்தக்க அந்த லோரி ஓட்டுநரை மீட்டததாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புபபடை உதவி இயக்குநர் சபாரோட்ஷி நோர் தெரிவித்தார்.

முன்னதாக இரண்டு கால்களும் முறிந்த நிலையில் வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் அந்த லோரி ஓட்டுநர் பெரும் அவதிக்குள்ளானதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →