பிரதமரின் மனைவி டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில்லுக்கு எதிரான அவதூறு தொடர்பான விசாரணையில் அதிகார முறைகேடல்கள் எதுவும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஷுஹைலி ஜைன் இவ்விவகாரம் குறித்து பேசுகையில், சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில் முறையான விசாரணை நடத்தப்பட்டது என்றார்.
கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டப்படி விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன, அவை இன்னும் ஆய்வு கட்டத்தில் உள்ளன என்று அவர் தெரிவித்தார்.
பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினரான வான் அசிசா மீது அவதூறு பரப்பும் வகையில் 3 சமூக ஊடகக் கணக்குகளின் உர்மையாளர்கள் மீது அத்தொகுதி பிகேஆர் கிளை கடந்த அக்தோபர் 22 ஆம் தேதி காவல்துறையில் புகார் அளித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து ரத்து நாகா எனும் பெயரில் சாமுக ஊடகப் பக்கத்தை நடத்தி வருபவர் கடந்த வியாழக்கிழமை காவல் துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
ரத்து நாகா விடம் கேட்கப்பட்ட 33 கேள்விகளுக்கும் அவர் பதிலளிக்கவில்லை எனவும் அவர் வைத்திருந்த கைப்பேசியையும் சிம் கார்டையும் பறிமுதல் செய்யப்பட்டதாக தேசியக் காவல் படையின் தலைவர் ரஸாருதீன் உசேன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.








