புத்ராஜெயா, ஆகஸ்ட்.13-
நீதித்துறை ஆணையர்களாக 23 பேர், இன்று புத்ராஜெயா நீதித்துறைக் கட்டடத்தில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நீதித்துறை ஆணையர்களாக நியமிக்கப்பட்டவர்களின் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் டத்தோ அப்துல் ஃபாரிட் அப்துல் காஃபூர் ஒருவர் ஆவார். அவரைத் தவிர இதர 14 வழக்கறிஞர்கள் நீதித்துறை ஆணையர்களாக நியமிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.
2006 ஆம் ஆண்டில் மங்கோலியா முன்னாள் அழகி அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் அதிரடி போலீஸ்காரர் அஸிலா ஹட்ரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜே. குல்டிப் குமார் நீதித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைவரும் நாட்டின் தலைமை நீதிபதி டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சாலே முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.








