Jun 4, 2026
Thisaigal NewsYouTube
மாணவர் ஆர்வலர் மீதான போலீஸ் விசாரணைக்கு ஜசெக  இளைஞரணி கண்டனம்
தற்போதைய செய்திகள்

மாணவர் ஆர்வலர் மீதான போலீஸ் விசாரணைக்கு ஜசெக இளைஞரணி கண்டனம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.04-

மாணவர் ஆர்வலர் பிரண்டன் கான் மீதான போலீஸ் விசாரணைக்கு ஜசெக. இளைஞர் பிரிவான டாப்சி (Dapsy) தலைவர் வூ கா லியோங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக நிர்வாகச் சீர்திருத்தங்கள், முறைகேடுகள் மற்றும் பொதுநிதி விரயம் குறித்துக் குரல் கொடுக்கும் இளைஞர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்தி அச்சுறுத்துவதை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், குற்றவியல் மிரட்டல் மற்றும் தகவல் தொடர்புச் சட்டங்களின் கீழ் பிரண்டன் கான் பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் தலைமையகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதை எதிர்த்தும், பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகள் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் மாணவர் அமைப்புகள் தங்களது கூட்டுப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

Related News