ஈப்போ, ஜூன்.04-
மலேசியாவின் பிரபல வழக்கறிஞரும், சமூக சேவகருமான டான் ஸ்ரீ வி. ஜெயரத்தினம் இன்று காலமானார். 101 வயதான அவர், ஈப்போவில் உள்ள தனது இல்லத்தில் இயற்கை எய்தியதாக அவரது மகள் ரத்னமலர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையமான 'யாயாசான் ஈப்போ' அமைப்பை நிறுவி பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர் உதவியுள்ளார்.
டான் ஸ்ரீ ஜெயரத்னம், பேரா மாநில குதிரைப்பந்தயக் கிளப்பின் தலைவராக 22 ஆண்டுகள் மிக நீண்ட காலம் பணியாற்றி மலேசிய சாதனப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். அவரது மறைவிற்குப் பல்வேறு தரப்பினர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.








