Oct 13, 2026
Thisaigal NewsYouTube

மலேசிய கினி நிருபர் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசிய கினி நிருபர் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவார்

கோலாலம்பூர், மார்ச்.12-

அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் ஏஜெண்டான ஒரு பாகிஸ்தான் ஆடவரிடமிருந்து 20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக மலேசிய கினி நிருபர் B. நந்தகுமார், வரும் வெள்ளிக்கிழமை புத்ராஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.

நந்தகுமார், நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவது குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், இன்று மாலையில் அவரிடம் தெரிவித்துள்ளது.

தாம் ஒரு நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்கப் போவதாக நந்தகுமார் தெரிவித்துள்ளார். அண்மைய காலமாக லஞ்ச ஊழலை அம்பலப்படுத்தி வரும் தன்னை மேலும் எழுதவிடாமல் தடுப்பதற்கு தனது வாயை மூடுவதற்காக இப்படியொரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளதாக நத்தகுமார் குறிப்பிட்டார்.

அந்நியத் தொழிலாளர்களைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வரும் ஏஜெண்டுகள் குறித்து தாம் தொடர்ந்து எழுதாமல் இருப்பதற்கு ஏஜெண்டு ஒருவரிடம் ஒரு லட்சம் ரிங்கிட் லஞ்சம் கேட்டு, கடைசியில் 20 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக கூறி, நந்தகுமார் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஷா ஆலாமில் உள்ள ஒரு ஹோட்டலில் எஸ்பிஆர்எம்மால் கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்கு ஏதுவாக நான்கு நாள் தடுப்புக் காவலுக்குப் பிறகு அவர் பத்தாயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்