பிகேஆர் கடசியின் 25 ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி பிரதமரும் அக்கட்சியின் தலைவருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இபுராகிமின் உருவப்படம் பொறித்த வெள்ளி விழா நாணயத்தை வெளியிடப்பட உள்ளது என அக்கட்சியின் வெள்ளி விழா குழு தலைவர் வோங் சென் தெரிவித்தார்.
பிகேஆர் கட்சியின் உச்சமன்ற உறுப்பினரான சென் குறிப்பிடுகயில், 3 வகையான வடிவமைப்புகளை கட்சியின் தலைவர் அன்வாரிடம் கொடுத்திருப்பதாகவும், அவரே அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுப்பார் எனவும் கூறினார்.
ராயல் சிலாங்கூர் தயாரிக்கும் இந்த நாணயத்தை இன்று முதல் அடுத்த ஆண்டு மார்ட் மாதம் வரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
வெள்ளியில் செய்யப்படும் அந்த நாணயம் இந்த ஆண்டு இறுதி வரையில் 100 வெள்ளியாகவும் அடுத்த ஆண்டு தொடங்கி 120 வெள்ளியாகவும் விற்கப்பட உள்ளது. தங்கம் பூசப்பட்ட பியூட்டர் வகை நாணயத்தை ஆண்டு இறுதி வரை 500 வெள்ளிக்கும் அடுத்த ஆண்டு முதல் 600 வெள்ளியாகவும் விற்கப்படும்.








