புத்ராஜெயா, பிப்ரவரி.22-
திரங்கானு சுல்தான் குடும்பத்தினரை மிகவும் ஆபாசமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் சமூக ஊடகங்களில் விமர்சித்த நபர் ஒருவரிடம் மலேசிய தகவல் தொடர்பு - பல்லூடக ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. X தளத்தில் பதிவிடப்பட்ட அந்தப் பதிவு, மதம், இனம், மன்னராட்சி தொடர்பான உணர்வுகளைப் புண்படுத்துவதோடு, நாட்டின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவரது கைபேசி, சிம் கார்டு ஆகியவை தடயவியல் ஆய்விற்காகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டது. மன்னராட்சிக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் அல்லது அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவோர் மீது சட்டம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று ஆணையம் எச்சரித்துள்ளது.








