சிப்பாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுங்கை பெலேக் சட்டமன்றத் தொகுதியில் டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள லிவி கியான் கெயோங், 5 அம்ச வாக்குறுதிகளை முன்னிறுத்தி தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். டிஏபி யின் பலம் பெரும் கோட்டைகளில் ஒன்றான சுங்கை பெலேக் சட்டமன்றத் தொகுதிக்கு முதல் முறையாக போட்டியிடும் லிவி கியான் கெயோங் புதிய முகமாக இருந்தாலும் சிப்பாங் வட்டாரத்தைப்பொறுத்தவரை அவர் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர் ஆவார். செப்பாங், சலாக் கில் பிறந்து வளர்ந்தவரான லிவி கியான் கெயோங், சாலாக், கம்போங் பாரு புது கிராமத் தலைவராகவும், சிப்பாங் நகராண்மைக்கழக உறுப்பினராகவும் பொறுப்பேற்று, சீரிய முறையில் பங்காற்றியவர் ஆவார். 48 வயதான லிவி கியான் கெயோங், சுங்கை பிளேக் தொகுதி மக்களுக்காக 5 அம்ச வாக்குறுதிகளை முன்வைத்துள்ளார். சிப்பாங்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தி மக்களின் வருமானத்தை அதிகரித்தல், பி48 சாலையை மேம்படுத்தும் திட்டம் நிறைவு பெறுவதை உறுதி செய்தல், சாலாக்கிலிருந்து சிப்பாங்கிற்கான தூரத்தையும், பயண நேரத்தையும் குறைத்தல், சுங்கை பிளேக் - KLIA 1,/ KLIA 2, / புக்கிட் பங்கோங் சாலையின் மேம்ம்பாட்டை கண்காணித்தல் மற்றும் சுங்கை பிளேக் சந்தையின் மறுகட்டுமானத்தை கண்காணித்தல் ஆகிய ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சுங்கை பெலேக் சட்டமன்றத் தொகுதியில் களம் இறங்கியிருப்பதாக லிவி கியான் கெயோங் கூறுகிறார். இவர் இத்தொகுதியில் முன்முனைப்போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு

மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: விரிவான விசாரணையை நடத்துவீர் - புக்கிட் அமானுக்கு கோரிக்கை

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்


