- பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உறுதி
பாலஸ்தீனம்,காஸா மீது போர் தொடுத்து வரும் இஸ்ரேலை கண்டிக்கும் அதேவேளையில் பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் மலேசியாவின் நிலைப்பாட்டினால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் முதலீடுகள் பாதிக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உறுதி அளித்துள்ளார்.
காஸா விவகாரத்தில் மலேசியா கொண்டுள்ள நிலைப்பாட்டினால் அந்நிய நிறுவனங்களின் முதலீடுகள் குறிப்பாக அமெரிக்க நிறுவனங்களின் முதலீட்டில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பிரதமர் விளக்கினார்.
அமெரிக்காவின் முக்கிய முதலீட்டாளர்களான Google Inc ( குகல் இன்கோப்பரெட் ) மற்றும் Microsoft Inc ( மைக்ரோசோப்ட் இன்கோப்பரெட் ) போன்ற முதலீட்டாளர்கள், மலேசியாவின் அரசியல் நிலைத்தன்மைக்கும், அரசாங்க பொருளாதார கொள்கைக்கும் மட்டுமே முக்கியத்துவம் வழங்குகிறார்களே தவிர இஸ்ரேல் விவகாரத்தில் மலேசியா கொண்டுள்ள நிலைப்பாட்டினால் அல்ல என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
அதேவேளையில் இஸ்ரேலுக்கு எதிராக மலேசியாவும், இதர முஸ்லீம் நாடுகளும் தொடர்ந்து கண்டன கணைகளை தொடுத்து வரும் என்று பிரதமர் அன்வார் உறுதி அளித்தார்.








