செர்டாங், நவம்பர்.06-
கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி சிலாங்கூர், ஶ்ரீ கெம்பாங்கான் சாலை வட்டம், Blue Water Estate அருகில் ஒரு புதரில் ஓர் இந்தியப் பெண், கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணக் கோலத்தில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் ஐந்தாவது சந்தேகப் பேர்வழியைக் கைது செய்துள்ளனர்.
ஐந்தாவது சந்தேகக் பேர்வழி கைது செய்யப்பட்டதை உறுதிச் செய்த செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஃபாரிட் அஹ்மாட், விசாரணைக்கு ஏதுவாக அந்த நபரை வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளனர் என்றார்.
நேற்று முன்தினம் நான்காவது சந்தேககப் பேர்வழியான 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரையில், கொலையுண்ட பெண்ணின் முன்னாள் காதலன், வளர்ப்பு சகோதரன், அந்தப் பெண்ணுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த பெண் மற்றும் ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








