Oct 7, 2026
Thisaigal NewsYouTube

நஜிப்பின் வீட்டுக் காவலுக்கான எஸ்ஓபி விவரங்கள் தெரிவிக்கப்பட்டன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜிப்பின் வீட்டுக் காவலுக்கான எஸ்ஓபி விவரங்கள் தெரிவிக்கப்பட்டன

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு வீட்டுக் காவல் தொடர்பான நடைமுறை விதிமுறைகளான எஸ்ஓபி பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு தலைமை இயக்குநர் டத்தோ ஸம்ரி மிஸ்மான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். முன்னதாக, நஜிப்பின் குடும்பத்தினரும் வழக்கறிஞர்களும் வீட்டுக் காவலுக்கான எஸ்ஓபி உள்ளிட்ட எந்த அதிகாரப்பூர்வ தகவலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

இவ்விவகாரம் தொடர்பில் பதில் அளிக்கையில் டத்தோ ஸம்ரி இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, வீட்டுக் காவல் தொடர்பான விதிமுறைகள், கண்காணிப்பு மற்றும் வருகையாளர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து இன்னும் சில விவரங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது. நஜிப், வரும் 2028 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் எஞ்சிய சிறைத்தண்டனையை அனுபவிப்பார். வீட்டுக் காவலில் நஜீப் வைக்கப்படுவதற்கு முன்னதாக அவர் 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →