Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தூக்கி வீசப்பட்ட நிலையில் கைக்குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

தூக்கி வீசப்பட்ட நிலையில் கைக்குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது

Share:

கைக்குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்ட நிலையில், நான்கு சக்கர வாகனத்தின் பின்னால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை, பிற்பகல் 12.30 மணியளவில், சபா, கெனிங்காவ், கம்போங் சுசுலாட், சோக் என்ற இடத்தில் சிவப்பு நிற நெகிழிப் பைக்குள் இருந்த அக்குழந்தை, பொது மக்களால் மீட்கப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கெனிங்காவ் மாவட்ட போலீஸ் தலைவர் நூர் ரஃபிடா காசிம் தெரிவித்தார்.

இன்னும் தொப்புள் கொடி நீக்கப்படாத நிலையில் இருந்த அப்பெண் குழந்தை, மஸ்டா நான்கு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக நூர் ரஃபிடா குறிப்பிட்டார்.

Related News