கோலாலம்பூர், ஆகஸ்ட்.21-
கோவிட் 19 தொடர்பில் இவ்வாண்டில் மலேசியாவில் இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று சுகாதாரத் துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் 53 மரணங்கள் நிகழ்ந்த வேளையில் இவ்வாண்டில் இதுவரை இரண்டு மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் இவ்வாண்டில் நாடு தழுவிய நிலையில் 41 ஆயிரத்து 814 கோவிட் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 83 ஆயிரத்து 18 ஆக இருந்தது என்று அவர் தெரிவித்தார்.
எனினும் கோவிட் 19 மிரட்டல் மலேசியாவில் குறைவாகவே உள்ளது என்று அவர் விளக்கினார்.








