குழந்தை பெற்று 36 நாட்களான மாது ஒருவர் தன்னை தானே கழுத்தில் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நான்கு குழந்தைகளுக்குத் தாயான அந்த 35 வயது மாது, தன்னுடைய கணவருடன் தொலைபேசியில் பேசப்போவதாக கூறிக் கொண்டு அறையில் நுழைந்துள்ளார். தன் கணவரிடன் பேசிய பிறகு அந்த மாது தன்னை தானே கழுத்துப்பகுதியில் கத்தியால் குத்திக் கொண்டுள்ளார் என அந்த மாதுவின் தாயார் போலீசாரிடம் தெரிவித்தார்.
நான்காவது குழந்தை பிறந்த பிறகு தனக்கு அடிகடி வயிற்று வலி ஏற்படுவதாகவும் அவர் அதற்கான சிகிச்சை பெற்றுக் கொண்டு வருவதாகவும் அவர் தாயார் மேலும் கூறினார். கெடாவில் வசிக்கும் தன் கணவரிடன் தொலைபேசியில் பேசிவிட்டு நீண்ட நேரம் அறையை விடு வெளியேறாததால் அவர் தம்பி கூரையின் வழி பார்க்கும் பொழுது அந்த மாது கத்தியால் குத்திக்கொண்டு வலியால் துடித்துக் கொண்டிருந்தார் என தாயார் கூறியதாக கிளந்தான் பசோக் வட்டார போலீஸ் தலைவர் சுபரிதென்டன் முஹமட் இஸ்மயில் ஜமாலுடீன் இவ்வாறு கூறினார். இந்தச் சம்பவம் குறித்து ஆழமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








