மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு எதிராக அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த பெர்சாத்துவின் மூத்த தலைவர்களில் ஒருவர் மீது ஆணையம் இன்று காவல் துறையில் புகார் செய்தது.
கடந்த நவம்பர் 10ஆம் தேதி, கெமாமனில் பெர்சத்துவின் தகவல் பிரிவு தலைவர் ரசாலி இட்ரிஸ் பேசிய டிக்டோக் காணொலி ஒன்றைக் குறிப்பிட்டு அந்தப் புகார் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அந்தக் கூட்டத்தில் ரசாலி சில போலி குற்றச் சாட்டுகளை முன் வைத்தார் எனவும் ஆணையம் கூறியது.
அரசு இயந்திரம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், நீதித்துறை ஆகியவை தற்போதைய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதே போல் முன்னாள் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளில் தண்டனை விதிக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை விமர்சித்தும் இருந்தார்.
ரசாலியால் முன்வைக்கப்பட்ட அவதூறும் குற்றச்சாட்டுகளும் ஆணையத்தால் மிகவும் கடுமையாகப் பார்க்கப்படுகிறது. இதனால், நாட்டின் அமலாக்கத் தரப்பு மீதும் சட்டத் துறையின் மீதும் பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கலாம் என ஆணையம் மேலும் கூறியது.








