Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பட்டர்வொர்த்தில் நிகழ்ந்த கலவரத்தைப் போலீசார் ஆராய்கின்றனர்
தற்போதைய செய்திகள்

பட்டர்வொர்த்தில் நிகழ்ந்த கலவரத்தைப் போலீசார் ஆராய்கின்றனர்

Share:

பட்டர்வொர்த், ஆகஸ்ட்.16-

பட்டர்வொர்த்தில் நேற்று நிகழ்ந்ததாகக் கூறப்படும் தனிநபர்களை உள்ளடக்கிய கும்பல் நடத்திய கலவரம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவர் பட்டர்வொர்த் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார். சாலை விபத்தில் சம்பந்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளோட்டிக்கு உதவத் தாம் முயற்சித்த போது இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்ததாக அந்த ஆடவர், தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளோட்டிக்கு உதவச் சென்ற தாம் முகத்திலேயே குத்தப்பட்டதாகவும், இதனைப் பார்த்த சாலையைக் கடந்த வாகனமோட்டிகளும் களம் இறங்கி சண்டையில் ஈடுபட்டதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார் என்று அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

இந்தக் கலவரம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக குற்றவில் சட்டம் 147 ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News