Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஒரு திறமையான சுகாதார அமைச்சரவை நாடு இழந்தது

Share:

முன்னாள் சுகாதார அமைச்சரும், மசீச.வின் முன்னாள் உதவித் தலைவரும், பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவருமான டத்தோ சுவா ஜுய் மெங்கின் நல்லுடலுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமுற்ற 80 வயதான டத்தோ சுவா ஜுய் மெங், ஒரு சிறந்த சுகாதார அமைச்சர் மட்டுமல்ல, ஒரு கடினமான காலகட்டத்திலும் பிகேஆர் கட்சிக்கு துணை நின்ற ஒரு சீர்திருத்தவாதியாவார் என்று பிரதமர் அன்வார் புகழாஞ்சலி சூட்டினார்.

மறைந்த சுவா ஜுய் மெங், தமக்கு 40 ஆண்டு கால நண்பர் ஆவார். சுகாதார அமைச்சராக நாட்டிற்கு சுவா ஆற்றிய சேவை அளப்பரியதாகும் என்று கோலாலம்பூர் கொஸ்பெல் எசெம்பிலி திருச்சபையில் நடைபெற்ற சிறப்பு பிராத்தனையின் போது சுவா நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியப் பின்னர் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News