கோலாலம்பூர், செப்டம்பர்.01-
பேரா மாநில அளவிலான தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது, பேரா சுல்தான், நஸ்ரின் ஷாவைக் கட்டியணைக்க முயற்சி செய்த பெண் ஒருவரின் செயலை இனக் கண்ணோட்டத்தில் அணுகுவதை மக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கெப்போங் எம்.பி. லிம் லிப் எங் கேட்டுக் கொண்டார்.
41 வயதுடைய அந்தப் பெண் ஒரு சீனப் பெண்மணி என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது தொடர்பில் லிம் கருத்துரைத்தார். நல்ல வேளையாக அந்தப் பெண், ஒரு மலாய்க்காரர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் விளக்கம் அளித்தப் பின்னரே இதற்கு ஒரு முற்றுப்பள்ளி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் எந்தவொரு சம்பவம் நிகழ்ந்தாலும் உண்மையிலேயே என்ன நடந்தது என்ற கண்ணோட்டத்தில் அணுக வேண்டுமே தவிர சம்பந்தப்பட்டவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற கண்ணோட்டத்தில் அல்ல என்று அந்த எம்.பி. கேட்டுக் கொண்டார்.








