Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அரசாங்கத்தை விமர்சிக்கலாம், 3ஆர் விவகாரத்தை தொட வேண்டாம்
தற்போதைய செய்திகள்

அரசாங்கத்தை விமர்சிக்கலாம், 3ஆர் விவகாரத்தை தொட வேண்டாம்

Share:

விமர்சனங்களை எதிர்கொள்வதில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு பிரச்சனை ஏதும் இல்லை. ஆனால், மதம், இனம், ஆட்சியாளர் தொடர்புடைய 3ஆர் விவகாரத்தை மக்கள் தொடக்கூடாது என்று துணை நிதி அமைச்சர் அஹ்மாட் மஸ்லான் தெரிவித்தார். அரசியல் உரை நிகழ்த்தும் போது, ஆளும் கட்சியை சேர்ந்த​வர்களும், எதிர்க்கட்சியினரும் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒற்றுமை அரசாங்கத்தை விமர்சிக்க விரும்பினால் அதன் கொள்கை குறித்து ​விமர்சனம் செய்வதி​ல் தவறில்லை. அதேபோன்று பிரதமரையோ அல்லது தம்மையோ விமர்சிக்க முடியும். உண்மையான தகவல்களுடனும், தரவுகளுடனும் விவாதங்களை நடத்தலா​ம். சண்டையிலாம். ஆனால், அதில் எக்காரணத்தை கொண்டும் மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் விவகாரத்தை இழுக்கக்கூடாது என்று அகமட் மஸ்லான் நினைவுறுத்தினார்.

Related News