Sep 27, 2026
Thisaigal NewsYouTube
சிறையிலிருந்து தப்பியோடிய பாகிஸ்தான் கைதி: தீவிர தேடுதல் வேட்டையில் மலேசிய போலீஸ்
தற்போதைய செய்திகள்

சிறையிலிருந்து தப்பியோடிய பாகிஸ்தான் கைதி: தீவிர தேடுதல் வேட்டையில் மலேசிய போலீஸ்

Share:

சுங்கை பூலோ, ஏப்ரல்.12-

சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பியோடிய 24 வயதான முகமது ஹசான் என்ற பாகிஸ்தான் நாட்டு கைதி இன்னும் மலேசியாவிற்குள்ளேயே இருப்பதாகச் சந்தேகிக்கப்படுவதால், அவரைப் பிடிக்க காவற்படையினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பாலியல் குற்றம், வழிப்பறி உள்ளிட்டப் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர் தப்பிச் சென்றதைத் தொடர்ந்து, அவர் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்வதைத் தடுக்க அனைத்து எல்லைகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சுங்கை பூலோ மாவட்டக் காவற்படைத் தலைவர், சுப்ரிண்டெண்டன் முஹமட் ஹாஃபிஸ் முஹமட் நோர் தெரிவித்தார்.

தற்போது பல்வேறு பாதுகாப்பு முகமைகளின் உதவியுடன் பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகத்திற்குரிய நபரைக் கண்டறியும் முயற்சிகள் நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

Related News