பந்தாய் ரெமிஸ், பெருவாஸ்,தைபிங் ஆகிய பகுதிகளில் இருக்கும் பெட்ரோல் நிலையங்களில் இருந்து அரசாங்கத்தின் உதவித் தொகை பெற்ற டீசலை வாங்கி அதனை அயல்நாட்டுக்குக் கடத்தும் முயற்சியை உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் மஞ்சோங் கிளை முறியடித்துள்ளது.
2 இலட்சத்து 60 ஆயிரம் வெள்ளி மதிப்பிலான டீசலை இங்குள்ள கிடங்கில் பதுக்கி வைத்திருந்தது
2 வார கண்காணிப்புக்குப் பிறகு அந்தக் கிடங்கில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் இரு உள்நாட்டுத் தொழிலாளர்கள், டீசல் என நம்பப்படும் திரவத்தை சந்தை விலையைக் காட்டிலும் மிகக் குறைவான விலைக்கு விற்கும் முயற்சியில் இருந்ததாக உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் பேரா மாநில இயக்குநர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் குறிப்பிட்டார்.
டீசலைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட லாரி, கடத்தப்பட உள்ள 5 ஆயிரம் லிட்டருக்கும் மேலான டீசல், அதற்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் ஆகியவற்றை அமைச்சி அதிகாரிகள் கைப்பற்றினர்.








