கோலாலம்பூர், அக்டோபர்.17-
தகுதி வரம்புக்கு மேல் தனிப்பட்ட கடன் தொகையை அங்கீகரிப்பதில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் கூடுதலாக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் முன்னணி வங்கி ஒன்றின் நான்கு அதிகாரிகள், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
44 வயது நோர் இஸ்கண்டார் அஸிஸ், 34 வயது முகமட் நஜ்மி முவாஸ் பெக்கான், 29 வயது அமீர் ஹஃபிஸி அனுவார், 33 வயது ஷாஸ்வான் பட்ரான் ஆகிய நால்வரும் கூட்டாகச் சேர்ந்து இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் அந்த நால்வரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளனர்.








