கோலாலம்பூர், ஜனவரி.17-
கோலாலம்பூர், அம்பாங்கில் உள்ள 'கேலக்ஸி அம்பாங்' (Galaxy Ampang) வணிக வளாகத்தில் உள்ள மசாஜ் சென்டரில், வயதான தம்பதியர், தற்செயலாகப் பூட்டி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சனிக்கிழமை குடிநுழைவுத் துறையினர், அந்தப் பகுதியில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த உடல்பிடி நிலையத்தில் வேலை செய்த மூன்று வெளிநாட்டு ஊழியர்கள், சோதனையில் இருந்து தப்பிக்க கடையின் கண்ணாடிக் கதவை வெளியே இருந்து பூட்டி விட்டு தப்பியோடினர். அந்தச் சமயத்தில் உள்ளே கால்களுக்கு மசாஜ் செய்து கொண்டிருந்த வயதான தம்பதியர், வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட தீயணைப்புப் படையினர், கடையின் பூட்டை உடைத்து தம்பதியைப் பத்திரமாக மீட்டனர்.
தலைநகரில் உள்ள இரண்டு வணிக வளாகங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் மொத்தம் 217 சட்டவிரோதக் குடியேறிகள் என்பது குறிப்பிடத்தக்கது.








