புத்ராஜெயா, டிசம்பர்.26-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் ஒன்றில் கடந்த ஓராண்டுக்கு மேலாக தனியொரு நபராகத் தங்கியிருந்த மாதுவின் குடும்ப உறுப்பினர்களை அடையாளம் காண இயலவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
தற்போது காஜாங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அந்த மாது, கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். எந்தவொரு செலவின்றி, விமான நிலையத்தின் வசதிகளை அனுபவித்து வந்த அந்த மாது, மன நல பாதிப்புக்கு ஆளானவர் என்று நம்பப்படுகிறது. அவரின் குடும்ப உறுப்பினர்களைத் தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக கேஎல்ஐஏ போலீஸ் தலைவர் அஸ்மான் ஷாரியாட் தெரிவித்துள்ளார்.








