லஞ்ச ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் - மினால் தேடப்பட்டு வரும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினின் மருமகன், குற்றம் இழைக்கவில்லை என்றால் தலைமறைவாக வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
முகைதினின் மருமகன் முஹம்மது அட்லான் பெர்ஹான் உட்பட இரண்டு நபர்களை எஸ்.பி.ஆர்.எம் தேடி வருவதாக அந்த ஆணையம் நேற்று வெளியிட்டுவுள்ள ஓர் அறிக்கை தொடர்பில் கருத்துரைக்கையில் அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டின் 8 ஆவது பிரதமராக முகைதின் பொறுப்பேற்றிருந்த காலக்கட்டத்தில் உள்துறை அமைச்சு சம்பந்தப்பட்ட குத்தகைத் தொடர்பில் அவரின் மருமகன் லஞ்சம் பெற்றது, முறைக்கேடு புரிந்தது தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரையும், 69 வயது மற்றொரு நபரையும் எஸ்.பி.ஆர்.எம் தீவிரமாக தேடி வருகிறது.

Related News

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்


