Oct 11, 2026
Thisaigal NewsYouTube

ஹோட்டல்களின் ஹாலால் சான்றிதழ் பறிக்கப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஹோட்டல்களின் ஹாலால் சான்றிதழ் பறிக்கப்பட்டது

மலாக்கா, மே.26-

மதுபான விருந்து ஏற்பாடு செய்யப்படுவதற்கு அனுமதி அளித்ததற்காக மலாக்காவில் உள்ள 5 நட்சத்திர அந்தஸ்தைக் கொண்ட இரண்டு ஹோட்டல்களின் ஹாலால் சான்றிதழ் பறிக்கப்பட்டதாக மாநிலக் கல்வி, உயர்க்கல்வி, மற்றும் சமய விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் ரஹ்மாட் மரிமான் தெரிவித்தார்.

மலாக்கா மாநில சமய விவகார இலாகா, அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் திடீர் சோதனை மேற்கொண்ட போது, மதுபான பயனீடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சமையல் கட்டில், உணவு பரிமாறும் பாத்திரங்களுடன் மதுபானத்திற்கு பயன்படுத்தப்படும் கிளாஸ் வகைகளும் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது, ஹாலால் விதிமுறைகளுக்கு மீறிய செயலாகும். எந்தவொரு கால அவகாசமும் வழங்கப்படாமல் அந்த இரு முன்னணி ஹோட்டல்களின் ஹாலால் சான்றிதழ் உடனடியாகப் பறிக்கப்பட்டதாக அவர் மேலும் விவரித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை