May 5, 2026
Thisaigal NewsYouTube
நான்கு வாகனங்கள் மோதிய விபத்து: சுகாதார உதவி அதிகாரி உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

நான்கு வாகனங்கள் மோதிய விபத்து: சுகாதார உதவி அதிகாரி உயிரிழப்பு

Share:

தெமர்லோ, பிப்ரவரி.02-

இன்று திங்கட்கிழமை காலை ஜெராண்டுட்-தெமர்லோ சாலையின் 26-வது கிலோமீட்டர் தூரத்தில் நான்கு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுகாதார உதவி அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

புரோட்டான் சாகா காரை ஓட்டிச் சென்ற 43 வயதான சத்தியன் ராஜகோபால் என்பவர், பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெமர்லோ மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முஹமட் நாஷிம் பாஹ்ரொன் தெரிவித்தார்.

இந்த விபத்தில் புரோட்டான் சாகா கார் தவிர, ஒரு டிரெய்லர் லாரி, பெரோடுவா அல்சா மற்றும் டொயோட்டா ஹிலக்ஸ் ஆகிய நான்கு வாகனங்கள் சம்பந்தப்பட்டு இருந்தன.

தெமர்லோவிலிருந்து ஜெராண்டுட் நோக்கிச் சென்ற பெரோடுவா அல்சா கார், கம்போங் டத்தோ ஷாரிஃப் அஹ்மாட் சந்திப்பில் வலதுபுறமாகத் திரும்புவதற்காக நின்றிருந்தது. அப்போது பின்னால் வந்த டிரெய்லர் அதன் மீது மோதியதில், அந்தக் கார் எதிர் திசைக்குத் தள்ளப்பட்டு புரோட்டான் சாகா காருடன் மோதியது. அதே வேளையில், பின்னால் வந்த டொயோட்டா ஹிலக்ஸ் காரும் புரோட்டான் சாகா மீது மோதியது என்று அவர் விளக்கினார்.

இந்த விபத்தில் பெரோடுவா அல்சா ஓட்டுநரான 42 வயது Agoes Zaid Haritha Mohamad என்பவர் பலத்த காயமடைந்து சுல்தான் ஹாஜி அகமது ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிரெய்லர் ஓட்டுநரின் அலட்சியமே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்