Dec 2, 2025
Thisaigal NewsYouTube
புத்ராஜெயா எம்ஆர்டி ரயில் சேவையில் தடங்கள்
தற்போதைய செய்திகள்

புத்ராஜெயா எம்ஆர்டி ரயில் சேவையில் தடங்கள்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.25-

புத்ராஜெயா எம்ஆர்டி ரயில் சேவையில் தடங்கள் ஏற்பட்டுள்ளதாக ரெபிட் ரெயில் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் தெரிவித்துள்ளது. எம்ஆர்டி ரயில் இருப்புப் பாதையில் சமிக்ஞை விளக்கு முறையை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் பட்சத்தில் இத்தகையத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எம்ஆர்டி ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்புவதற்கு அதன் தொழில்நுட்பக்குழு முழு வீச்சாக சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.

பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரியத்தைக் களைவதற்கு க்வாசா டாமான்சாரா ரயில் நிலையத்திற்கும், புத்ராஜெயா சென்ரல் ரயில் நிலையத்திற்கும் இடையில் 40 பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருவதாக ரெபிட் ரெயில் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் தித்திவங்சா எம்ஆர்டி ரயில் நிலையத்திலிருந்து பயணிப்பவர்கள், அம்பாங் – ஶ்ரீ பெட்டாலிங் வழிதடங்களுக்கான சேவைகள் அல்லது மோனோரயிலைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்த நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. அதே வேளையில் கிளானா ஜெயா- வழித்தடத்திற்கான பயணிகள் அம்பாங் பார்க் மற்றும் பெர்சியாரான் கேஎல்சிசி எம்ஆர்டி ரயில் நிலையங்களின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு அந்த நிறுவனம் ஆலோசனை கூறியுள்ளது.

Related News