கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எம்ஏஎச்பி எனப்படும் மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் அறிவித்துள்ளது.
சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ஓடுபாதை மூடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் எம்ஏஎச்பி தெரிவித்துள்ளது.
மேலும், பாதுகாப்பு ஆய்வுகள் மற்றும் ஓடுபாதையைச் சுற்றியுள்ள சுத்தப்படுத்தும் பணிகள் நிறைவடைந்ததும், அது மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பயணிகள் தங்களது விமானங்களின் தற்போதைய நிலை மற்றும் மாற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








