Jul 16, 2026
Thisaigal NewsYouTube
கோல கங்சார் பள்ளி ஆசிரியர் மாணவர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் - போலீசார் மறுப்பு
தற்போதைய செய்திகள்

கோல கங்சார் பள்ளி ஆசிரியர் மாணவர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் - போலீசார் மறுப்பு

Share:

பேராக் மாநிலம் கோலா கங்சாரில் உள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவர் குழுவால் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலை போலீசார் மறுத்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட போது அத்தகைய சம்பவம் எதுவும் அங்கு நடக்கவில்லை என்பதை கோல கங்சார் மாவட்ட போலீஸ் தலைவர் ஹைஷாம் ஹாரூன் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு இதுவரை எந்த புகாரும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, பொதுமக்கள் ஊகங்கள் செய்யவோ, எதிர்மறையான கருத்துகளைப் பகிரவோ வேண்டாம் என்று நேற்று வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கிடத்த தகவலில் படி, அப்பள்ளியின் கட்டொழுங்கு ஆசிரியர், மாணவர் ஒருவரின் தலைமுடியை சீராக இல்லாததைக் கண்டு அதை வெட்டியதைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை காலை சுமார் 11.30 மணியளவில் அந்த ஆசிரியர் மாணவர்களால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், இதனை தற்போது போலீசார் முற்றிலும் மறுத்துள்ளனர்.

Related News

ஈப்போவில் இணைய மோசடிக் கும்பல் சிக்கியது: 18 சீனப் பிரஜைகள் கைது

ஈப்போவில் இணைய மோசடிக் கும்பல் சிக்கியது: 18 சீனப் பிரஜைகள் கைது

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

10.879 பில்லியன் ரிங்கிட் சமையல் எண்ணெய் மானியம் தகுதியானவர்களைச் சென்றடையவில்லை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

14 வயது சிறார்களிடமும் வகை-2 நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது – சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

சபாவில் கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலத்தை சேதப்படுத்திய 5 மாணவர்கள் கைது

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

மலேசிய இந்தியர்களின் ஆவணப் பிரச்னைகளுக்குத் தீர்வு: உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் புள்ளிவிவரங்களுடன் விளக்கம்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்

நெட்வொர்க் பள்ளி விவகாரம்: இஸ்ரேலியர்கள் இருப்பது உறுதியானால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்