புத்ராஜெயா, ஜூலை.26-
கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற துருன் அன்வார் பேரணிக்குத் தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கிண்டல் தொனியில் கூறினார்.
இன்று சனிக்கிழமை 2025 ஆம் ஆண்டுக்கான பிரதம பேச்சுப் போட்டியின் இறுதிச் சுற்றை நிறைவு செய்து வைத்த நிகழ்வில் கலந்து கொண்ட அன்வாரிடம், செய்தியாளர்கள் அணுகி, இன்று கோலாலம்பூரில் நடத்தப்பட்ட துருன் அன்வார் பேரணி குறித்து கருத்து கேட்ட போது, தமக்கு அழைப்பு இல்லை என்று சுருக்கமாகப் பதில் அளித்தார்.
எதிர்க்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணி சுமூகமாக, பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதிச் செய்வதற்கு போலீஸ் துறை ஒத்துழைக்க வேண்டும் என்று இதற்கு முன்பு பிரதமர் அன்வார் உத்தரவு பிறப்பித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








