Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கோலா கெட்டில் பகுதியில் 700 வீடுகளுக்கு குடிநீர்த் தடை:   குழாய் உடைப்பால் ஏற்பட்ட அவதி!
தற்போதைய செய்திகள்

கோலா கெட்டில் பகுதியில் 700 வீடுகளுக்கு குடிநீர்த் தடை: குழாய் உடைப்பால் ஏற்பட்ட அவதி!

Share:

பாலிங், ஆகஸ்ட்.03-

கோலா கெட்டில், ஜாலான் பத்து லீமாவில் நேற்று இரவு ஏற்பட்ட பெரும் குடிநீர்க் குழாய் உடைந்ததால், அப்பகுதியில் உள்ள சுமார் 700 பயனாளர்களின் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்ட து என கெடா மாநிலப் பொதுப் பணி, இயற்கை வளம், நீர் வளம், சுற்றுச் சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ முகமட் யூசோஃப்@ மூனிர் ஸாகாரியா தெரிவித்தார்.

300 மில்லி மீட்டர் பிவிசி குழாயில் ஏற்பட்ட இந்த உடைப்பால், பத்து லீமா, தாமான் மெலாத்தி, பிஞ்சூல் லுவார், கெஜாய், பாகாய் உள்ளிட்ட பல குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9.30 மணியளவில் பழுது பார்க்கும் பணிகள் தொடங்கின. குடிநீர் விநியோகம் படிப்படியாக மீட்டெடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தண்ணீர் லாரிகள் அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News