Jul 29, 2026
Thisaigal NewsYouTube
2 வயது பெண் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தது
தற்போதைய செய்திகள்

2 வயது பெண் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தது

Share:

லிப்பிஸ் , ஜூன் 27 -

பகாங்,போஸ் லென்ஞாங் , கம்போங் சிமோய் லாமா -வில் வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றில் 2 வயது பெண் குழந்தை ஒன்று நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அக்குழந்தை சுயநினைவின்றி பொதுமக்களால் சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள ஆற்றில் காணப்பட்டதாக லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் இஸ்மாயில் மான் தெரிவித்தார்.

சவப் பரிசோதனைக்காக பாதிக்கப்பட்ட அக்குழந்தையின் உடல் லிப்பிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்மாயில் மான் மேலும் தகவல் அளித்தார்.

Related News