எல்.பி.கே எனப்படும் கோலக்கிள்ளான் துறைமுக வாரியத்தின் மீது Maritime Network Sdn. Bhd. டின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ ஆர். ஜெயந்திரன், தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நாட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தடம் பதித்துள்ள அந்த கப்பல் நிறுவனத்தின் தோற்றுநரான டத்தோஸ்ரீ ஜெயந்திரன், குழப்பமான அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படும் கோலக்கிள்ளான் துறைமுக வாரியத்தின் நடவடிக்கைக்கு எதிராக தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கப்பல்கள் அணைவது தொடர்வில் தெளிவான விதிமுறைகள் இருந்த போதிலும் பெரிய கப்பல்கள் நிறுத்த அனுமதிக்கப்படும் விவகாரத்தில் துறைமுக பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து கோலக்கிள்ளான் துறைமுக வாரியம் சர்ச்சை செய்வதாக ஜெயந்திரன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தங்களின் Maritime Network நிறுவனம், பாதுகாப்பு அம்சங்களை புறக்கணித்ததாகவும், நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான பெரிய கப்பல்கள் துறைமுகத்தில் அணையும் போது ஆபத்தான நிலைமையை உண்டு பண்ணுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது என்ற ஜெயந்திரன் சுட்டிக்காட்னார்.
கப்பல் அணைவதற்கு முன்னதாக கப்பலின் அளவு குறித்து கோலக்கிள்ளான் துறைமுக வாரியத்தின் எழுத்துப்பூர்வமான அனுமதி கிடைத்தப் பின்னரே அணைகிறது என்பதை தாம் தெளிவுப்படுத்த விரும்புவதாக ஜெயந்திரன் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் தங்களுக்கு உண்மையான விளக்கங்கள் அளிக்கப்பட வேண்டும். ஏனெனில், இது போன்ற அறிக்கைகள் தங்கள் மீது அவதூறு கூறும் தன்மையில் உள்ளது. தவறான அறிக்கைகள் வெளியிடப்படுவதை தவிர்க்க அந்த வாரியத்தின் உதவும் என்று தாங்கள் நம்புவதாக ஜெயந்திரன் Malaysia Gazette டிடம் தெரிவித்துள்ளார்.








