Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

தற்காக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்கிறார்

Share:

கோலா லம்பூர், ஜுலை 19-

மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து தம்மை 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்து இருக்கும் சபாநாயகர் முடிவு தொடர்பில் தம்மை தற்காத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று பெரிக்காத்தான் நேஷனலின் மச்சாங் எம்.பி. வான் அஹ்மத் ஃபய்சல் வான் அஹ்மத் கமால் தெரிவித்துள்ளார்.

வரும் அக்டோபார் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தாக்கல் மீதான விவாதத்தில் கலந்து கொள்வதற்கு தாம் மிகுந்த ஆர்வமாக இருந்த வேளையில் தாம் இடை நீக்கம் செய்யப்பட்டது துரதிர்ஷடமானது என்று வான் அஹ்மத் ஃபய்சல் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சந்திக்கலாம் என்று கூறி, அவர் நாடாளுமன்ற கட்டத்திலிருந்து வெளியேறினார்.

MAHB எனப்படும் Malaysia Airport Holdings Berhad நிறுவனத்தை கையகப்படுத்தியதன் பின்னணியில் செயல்பட்ட சூத்திரதாரி தொடர்பான தகவல் அடங்கிய மொட்டைக் கடிதம் வைரலானதைத் தொடர்ந்து வான் அஹ்மத் ஃபய்சல் –க்கு மக்களை சபா நாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் இந்த தடையை விதித்ததார்.

நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாத ஒரு மொட்டைக் கடிதம் குறித்து அனுமதியின்றி மக்களவையில் வான் அஹ்மத் ஃபய்சல் விவாதித்ததுடன், அதில் EPF.பின் குறிப்பிட்ட உயர் அதிகாரி ஒருவரின் பெயரையும் பகிரங்கமாக அறிவித்ததாக அவருக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு