Oct 9, 2026
Thisaigal NewsYouTube

மாணவர்களின் பாதுகாப்பு மீதான எஸ்ஓபி நடைமுறை மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாணவர்களின் பாதுகாப்பு மீதான எஸ்ஓபி நடைமுறை மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும்

கோலாலம்பூர், ஜூன்.26-

சைபர்ஜெயாவில் பல்லைக்கழக மாணவி ஒருவர் தாம் தங்கியிருந்த விடுதியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தனியார் உயர்கல்விக்கூட்டங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு எஸ்ஓபி நடைமுறைகள் மறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் உயர்க்கல்வி துணை அமைச்சர் சைஃபுடின் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.

தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 20 வயது மாணவி, தலையிலேயே அடித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவத்திற்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்ட சைஃபுடின் அப்துல்லா, தனியார் உயர்க்கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்கள் தங்கக்கூடிய விடுதிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்ய, தற்போது உள்ள அனைத்து எஸ்ஓபி நடைமுறைகளும் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இது போன்ற கொடூரச் சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு மாணவர்களின் பாதுகாப்பிற்கு அதீத முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →