Oct 15, 2026
Thisaigal NewsYouTube

சிலாங்கூர் மந்திரி பெசாருக்கு தேவஸ்தானத் தலைவர் நன்றி நல்கினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிலாங்கூர் மந்திரி பெசாருக்கு தேவஸ்தானத் தலைவர் நன்றி நல்கினார்

கோலாலம்பூர், ஜன.2-

பத்துமலைத்திருத்தலத்தில் மேல்குகைக்கு செல்வதற்கு மூத்தக்குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறளாளிக்காக நிர்மாணிக்கப்படவிருக்கும் மின்படிகட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இதற்கான உறுதிக்கடிதம் சிலாங்வர் மாநில அரசு இம்மாதம் 19 ஆம் தேதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் தேதி பத்துமலைத்திருத்தலத்திற்கு சிறப்பு வருகை புரிந்த மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தந்துள்ள வாக்குறுதிக்கு தேவஸ்தானம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக டான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டார்.

ஜனவரி 25 ஆம் தேதி நடைபெறும் பூமிபூஜைக்கு பின்னர் கட்டுமானப்பணி தொடங்கும் வேளையில் அடுத்த 2026 ஆம் ஆண்டு தைப்பூச விழாவிற்கு முன்னதாக மின்படிகட்டுகள் நிர்மாணிக்கும் திட்டம் நிறைவடையும் என்று டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.

டான்ஸ்ரீ நடராஜா தலைமையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் டத்தோ என். சிவகுமார், செயலாளர் சேதுபதி, பொருளாளர் டத்தோ பெ. அழகன் உட்பட தேவஸ்தானத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்