அரச மலேசிய போலீஸ் படையின் துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள டத்தோஸ்ரீ அயோன் கான் மைடின் பிச்சை, நேற்று தமது பணியை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். காலை 8 மணியளவில் தமது துணைவியார் டத்தின்ஸ்ரீ ஸலினா முகமட் அரிப்பினுடன் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தை வந்தடைந்த அயோப் கானை, போலீஸ் படை செயலாளர் டத்தோ நூர்லியா முகமட் சடுடின் உட்பட முக்கிய அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் 31 ஆவது மாடியில் உள்ள அமைந்திருக்கும் தமது அலுவலகத்திற்கு புறப்பட்டு, புதிய பொறுப்பினை ஏற்றார்.
கெடா மாநிலத்தில் பெண்டாங்கில் ஒரு சிறிய கிராமத்தில் கோப்பிக் கடை நடத்தி வந்த மைடின் பிச்சையின் புதல்வரான அயோப் கான், போலீஸ் படையில் சேர்வதற்கு இடம் கிடைக்காத நிலையில், சிறிது காலம் காத்திருந்து, ஓர் அரிய வாய்ப்பாக ஒரு இடம் காலியானதால் அந்த இடத்தில் பணிக்கு அமர்ந்து, இன்று நாட்டின் துணை ஐஜிபியாக உயர்த்துள்ளார்.

Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


